ரோஜாவுக்கு ‘ரோஜாப்பூ’ மாலை அணிவித்து வரவேற்ற தொகுதி மக்கள்.!!

 
1

‘செம்பருத்தி’ படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையிற்கு அறிமுகமானர் ரோஜா. தமிழ்நாட்டில் நடிகையாக அறியப்படும் ரோஜா, ஆந்திராவில் முழு நேர அரசியல்வாதியாக இயங்கி வருகிறார். முதலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்த இவர், அதன்பின் அக்கட்சியிலிருந்து விலகி ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் இணைந்தார். ஜெகன்மோகன் கட்சியின் மகளிர் அணித்தலைவியாகவும் உள்ளார்.

தற்போது ஆந்திராவில் உள்ள நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார். மேலும் அவர் தற்போது ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.

இந்நிலையில் சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவரது சொந்த தொகுதியான நகரிக்கு சென்றுள்ளார். திறந்தவேனில் நின்றபடி அவர் மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அப்போது அந்த ஊர் மக்கள் ஒன்றாகத் தெருவின் இரு பக்கமும் வரிசையாக நின்று அவரை மலர்த்தூவி வரவேற்றனர். மேலும் கிரேன் மூலம் ராட்சத ரோஜா மாலை அணிவித்து அமைச்சர் ரோஜாவை வரவேற்றனர். அந்தக் காட்சி சினிமாவில் உள்ளதைப் போல உள்ளது.  மக்கள் மலர்த்தூவி வரவேற்பதை மிகவும்  உற்சாகமாக ஏற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தார்.

From Around the web