பரிசுத்தொகை ரூ.10 லட்சம்! அமீர் நடத்தும் ஃபிட்னெஸ் போட்டி..!! 

 
1

தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை படித்தவர் இயக்குனர் அமீர்.மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலம் அடைந்தவர். இவர் தற்போது இயக்கம், நடிப்பு என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், போதைப்பொருட்களை பயன்படுத்துவதின் தீமைகள் மற்றும் ஆரோக்கியமாக வாழ்வதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வரும் செப்டம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் மதுரை கே.எல்.என் பொறியியல் கல்லூரியில் World Fitness Federation (WFF) எனும் அமைப்பின் மூலம் உலக அளவிலான உடற்கட்டமைப்பு மற்றும் உடற்தகுதி போட்டியை இயக்குநர் அமீர் நடத்துகிறார். 

மற்ற போட்டிகளை போல் அல்லாமல், இந்தப் போட்டியில் அதிக பங்கேற்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.10 லட்சம் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் அமீர் கூறினார்.

From Around the web