த்ரிஷா இதுவரை திருமணம் செய்யாமல் இருப்பதற்கு காரணம் இது தான் - பயில்வான் ரங்கநாதன் கூறிய ரகசியம்..!!

 
1


தமிழ் சினிமாவில் நீண்ட காலம் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை த்ரிஷா. ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், சூர்யா என கோலிவுட்டின் டாப் நடிகர்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்து விட்டார். கடந்த சில ஆண்டுகளாக ஹீரோயினாக்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

மேலும் சமீபத்தில் வெளியான பிரமாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். குந்தவை கதாப்பாத்திரத்திற்காக பல தரப்பிலிருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

மேலும் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு த்ரிஷாவின் சினிமா மார்கெட் மீண்டும் உயர்ந்துள்ள நிலையில், தளபதி 67 படத்திலும் அவர் கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், 40 வயதை நெருங்கும் த்ரிஷா இதுவரை திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணத்தை பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், “பொன்னியின் செல்வன் பட வெளியான பிறகு த்ரிஷாவின் மார்க்கெட் உயர்ந்துள்ளது. இதனால் தற்போது தமிழ் சினிமாவில் ரூ.5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக அவர் வலம் வருகிறார்.

1

துணை நடிகையாக சினிமாவில் அறிமுகமான த்ரிஷா, பின்னர் கதாநாயகியாகி அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். சில வருடங்களுக்கு முன்பு நடிகை த்ரிஷாவுக்கும் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.ஆனால் அது நிச்சயதார்த்ததோடு நின்று விட்டது. இருவருக்கும் திருமணம் நடக்கவில்லை. 

பின்னர் த்ரிஷா தெலுங்கு நடிகர் ராணா டகுபதியை காதலித்ததோடு, இருவரும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தனர். ஆனால் அந்த காதலும் தோல்வியில் முடிந்து, இருவரும் பிரிந்துவிட்டனர்.

பின்னர் த்ரிஷா நடிகர் சிம்புவின் காதல் வலையில் சிக்கி வெளியே வந்தார். தற்போது த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை பார்த்து வரும் நிலையில், அவர் யாரையும் பிடிக்கவில்லை என திருமணம் செய்யாமல் உள்ளார். த்ரிஷாவுக்கும் நடிகை நயன்தாரா போல் நீண்ட நாட்கள் காதலித்து திருமணம் செய்து கொள்ள ஆசையாக உள்ளது.ஆனால் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் போதெல்லாம், ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து செய்தவர்கள்தான் தனது நினைவுக்கு வருகிறார்கள் என்று கூறும் த்ரிஷா, எங்கே தனக்கும் அவர்களை போல் விவாகரத்தாகிவிடும் என்று பயமாக உள்ளது என்றும் அந்த பயத்தால் தான் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

1

மேலும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால், தான் யாருக்கும் கட்டுப்படாமல் இருக்கலாம் என்பதாலும் த்ரிஷா திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். தான் திருமணம் செய்து கொள்ளும் நபர் நடிக்க வேண்டாம் என்று கூறினாலோ அல்லது நடிக்க அனுமதி கொடுத்து சந்தேகப்பட்டாலோ வாழ்க்கை நாசமாகிவிடும் என்பதால் த்ரிஷா திருமணத்தை தொடர்ந்து தள்ளி போடுகிறார்.” எனக் கூறியுள்ளார்.

From Around the web