காபி வித் காதல் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!!

 
1

குஷ்புவின் ‘அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ மற்றும் ‘பென்ஸ் மீடியா நிறுவனங்கள்’ இணைந்து தயாரிக்கும்  படம்  ‘காபி வித் காதல்’.

படம் அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.நவராத்திரியின் நீண்ட விடுமுறை நாட்களில் வெளியாகும் இந்த காதல் நகைச்சுவை படத்தில் ஜெய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் தவிர அமிர்தா ஐயர், மாளவிகா ஷர்மன், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, திவ்யதர்ஷினி, சம்யுக்தா சண்முகம், யோகி பாபு மற்றும் ரெடி கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த மாதம் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது 
 


 

From Around the web