ரிலீசானது ஏகே61 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்..!!

நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை அடுத்து எச்.வினோத், அஜித் மற்றும் போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக புதிய படத்திற்காக இணைந்துள்ளனர். ஜிப்ரான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அஜித் நடிக்கும் 61வது படத்திற்கு ‘துணிவு’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று படக்குழு வெளியிட்டு உள்ளனர் .‘துணிவு’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தின் போஸ்டரில் நடிகர் அஜித் செம்ம மாஸாக இருக்கிறார். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தற்பொழுது செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு உள்ளனர் .
Mass + Class #Thunivu second poster#AK61 #NoGutsNoGlory#Ajithkumar #HVinoth @BoneyKapoor @ZeeStudios_ @BayViewProjOffl @SureshChandraa #NiravShah @GhibranOfficial #Milan @SupremeSundar_ @editorvijay #Kalyan #AnuVardhan @premkumaractor #MSenthil @SuthanVFX pic.twitter.com/lOfaSvTQSc
— Suresh Chandra (@SureshChandraa) September 22, 2022
இந்தப் படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொக்கென், தெலுங்கு நடிகர் அஜய் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் அஜித் இரட்டை கதாபாத்திரங்களில் அவரே கதாநாயகன் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம். வங்கிக் கொள்ளையை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது.