சாதனை மேல் சாதனை படைக்கும் பார்த்திபனின் இரவின் நிழல்..!

 
1

பார்த்திபன் என்றாலே ஒரு புதுமை, யாரும் செய்யாத ஒரு முயற்சி, ஒரு புதிய கோணம், எதிலுமே ஒரு தனித்துவ செயல்பாடு என அவரின் பாணியே தமிழ் சினிமாவில் ஒரு தனித்த அடையாளம்.

அப்படிப்பட்டவர் இயக்கும் படங்கள் வணிக ரீதியாக தோல்வியை சந்தித்து இருந்தாலும் கலை துறை, மக்கள் மத்தியில் அவரின் படங்களுக்கு என்று தனி ரசிகர் படையே உண்டு எனலாம். மக்களுக்கு நல்ல படைப்பை கொடுக்க வேண்டும் என்றே ஒரே சிந்தனையோடு எடுக்கப்படுகிறது அவரின் படங்கள்.இவர் அண்மையில் எடுத்த ஓத்த செருப்பு திரைப்படம் ஆஸ்கர் வரை சென்று இந்திய சினிமாவையே கௌரவபடுத்தியது. 

அடுத்து தற்போது அவர் எடுத்துள்ள முயற்சி மிகவும் அபரிமிதமான இன்று. ஒன் டேக் படத்தை இயக்கி உள்ளார் . அது தான் இரவின் நிழல்.கவிஞர் வைரமுத்து இந்த படத்திற்கு பாடல்களை எழுத, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கிறார். உலக திரை வரலாற்றில், ஒரே ‘ஷாட்’டில் ஒரு படத்தை உருவாக்கியிருப்பது, இதுவே முதல்முறை. இதற்காக 200 தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படம் வெளிவரும் முன்னே மற்றும் ஒரு சாதனை படைத்துள்ளது . அது என்னவென்றால் சுமார் 50 அரங்கங்கள் கொண்ட பிரமாண்டமான ‘செட்’டில், 300 நடிகர்கள் ஏராளமான ஆடை மற்றும் ஒப்பனை மாற்றங்களுடன் 50 வருட கதைக்களம் கொண்ட முதல் ‘சிங்கிள் ஷாட்’ படமாக இந்த படம் அமைந்துள்ளதாம் .

From Around the web