விமானத்தில் இருந்து குதித்து துணிவு பேனரை பறக்கவிட்ட வீரர்கள்..!!

 
1

நடிகர் அஜித்குமார் மீண்டும் இயக்குநர் எச்.வினோத்துடன் இணைந்துள்ள படம் ‘துணிவு’. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. பொங்கலுக்கு படம் வெளியாக உள்ள நிலையில் அடுத்தடுத்து பட அப்டேட்களை வெளியிட்டு வருகின்றனர்.

Thunivu

இந்த படத்தில் இருந்து சில்லா சில்லா, காசேதான் கடவுளடா' பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று மூன்றாவதாக கேங்க்ஸ்டா பாடல் வெளியானது. 24 மணிநேரத்தில் கிட்டத்தட்ட 40 லட்சம் பார்வைகளை நெருங்கி வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் லைகா நிறுவனம் அங்கு புரமோஷனை அமர்க்களப்படுத்தி வருகிறது. வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்யும் ஸ்கை டைவிங் குழுவினர் துபாயில் விமானத்தில் இருந்து துணிச்சலாக குதித்து துணிவு படத்தின் அப்டேட் டிசம்பர் 31ல் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.


இதை வைத்து பார்க்கையில் அன்றைய தினம் படத்தின் டீசர் அல்லது டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. துணிவு படத்தின் இந்த துணிச்சலான புரமோஷனை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி டிரெண்ட் செய்தனர்.

From Around the web