பிரிந்து இருக்கிற புள்ளைங்கள சேர்த்து வைக்க செத்து போன ஒரு அம்மாவின் கதை - வெளியான பரோல் பட ட்ரைலர்..!!

'காதல் கசக்குதய்யா' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான துவாரக் ராஜா, தனது அடுத்த அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். தனது முதல் படத்தில் முழுக்க காதல்-மோதல் என காதலர்களுக்குள் நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுத்திருந்தார். தனது இரண்டாவது படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தில் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஒரு க்ரைம் த்ரில்லர் படமான 'பரோல்' படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ஆர்.எஸ்.கார்த்திக், லிங்கா, வினோதினி வைத்தியநாதன், கல்பிகா கணேஷ் மற்றும் மோனிஷா முரளி ஆகிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திலுள்ள சிறப்பு என்னவென்றால் படக்குழுவினர், தயாரிப்பு, ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என அனைவருமே புதுமுகங்கள்.
இப்படத்திற்கு ராஜ்குமார் அமல் இசையமைக்க, மகேஷ் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, மிரட்டலான பல ஆக்ஷன் காட்சிகளுடன் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.