தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஹெய்ஸ்ட் ஜானரில் உருவாகியுள்ள ஆதாரம் படத்தின் டீஸர் வெளியானது..!! 

 
1

புதுமுக நடிகர் அஜித் விக்னேஷ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'ஆதாரம்'. கதாநாயகியாக பூஜா நடித்துள்ளார். மேலும், ராதாரவி, ஒய்.ஜி மகேந்திரன், கதிரவன் பாலு, அட்ரஸ் கார்த்திக், வினோத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேட்டினி போல்க்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.பிரதீப்குமார் மற்றும் ஆப்ஷா மைதீன் தயாரிக்கும் இந்த படத்திற்கு கவிதா மற்றும் ராசி தங்கதுரை இணைந்து வசனம் எழுதியுள்ளனர். என்.எஸ் ராஜேஷ் குமார் மற்றும் ஶ்ரீவத்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். டாய்ஸ் படத்தொகுப்பு செய்கிறார்.

அடுத்த ஆண்டு 'ஆதாரம்' திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் 'ஆதாரம்' படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசரை நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் பி.எஸ்.மித்ரன், ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா மற்றும் இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் ஆகியோர் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டனர்.

From Around the web