தலைநகரம் தலைநகரம் ரத்தக்கடலின் தலைநகரம் - வெளியான சுந்தர் சி யின் தலைநகரம் 2 படத்தின் டீஸர்..!! 

 
1

கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குநர் சுந்தர். சி ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் தலைநகரம்.இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் வடிவேலு, ஜோதிர்மயி , பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.  படத்தில் வடிவேலு காமெடி மாபெரும் வரவேற்பை பெற்றது. நாய் சேகர்  என்ற கதாபாத்திரத்தில் வரும் வடிவேலு ஒவ்வொரு சீனிலும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். 

இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது தலைநகரம் 2-ஆம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் சுந்தர் சியே கதாநாயகனாக நடித்து வருகிறார். சுந்தர் சியின் ‘இருட்டு’ படத்தை இயக்கிய வி.இசட்.துரை இப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது தலைநகரம் 2-ஆம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் சுந்தர் சியே கதாநாயகனாக நடித்து வருகிறார். சுந்தர் சியின் ‘இருட்டு’ படத்தை இயக்கிய வி.இசட்.துரை இப்படத்தை இயக்கி வருகிறார். 

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மிரட்டலான உருவாகியுள்ள இந்த டிரெய்லர் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

From Around the web