விஷாலின் முதல் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள லத்தி படத்தின் டீஸர் இன்று வெளியாகிறது..!! 

 
1

தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் தயாராகி வரும் ‘லத்தி’ படம் விஷாலின் முதல் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. விஷால் போலீசாக நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் எச்.வினோத் இயக்கி வருகிறார். ரானா பிரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்கள் செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கின்றனர்.

ஒரு சாதாரண காவலர்  பயணம் மற்றும் அவர் சந்திக்கும் பிரச்சனையை மையமாக வைத்து லத்தி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

1

சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஷால் 10 வயது சிறுவனுக்கு தந்தையாக நடித்துள்ளார்.  அதேபோல் அவரின் மனைவியாக சுனைனா நடித்திருக்கிறார்.  விஷாலின் முந்தைய திரைப்படங்களில் இருந்து லத்தி திரைப்படம் சற்று மாறுபட்டு இருக்கும் என்றும், கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது எனவும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் இப்படத்தின் டீசர்  இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

From Around the web