மிரட்டும் த்ரில்லர் ஜானரில் நடிகர் பரத்தின் 'மிரள்' படத்தின் டீசர் வெளியானது..!! 

 
1

பரத் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் "மிரள்". இப்படத்தில் வாணி போஜன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் மீர் கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர் .

ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு பிரசாந்த் எஸ்.என். இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் வெட்கட் பிரபு தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

இந்த டீசர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

From Around the web