‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தின் டிரெய்லர் வெளியானது..!

 
1

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’. இப்படத்தை ‘வஞ்சகர் உலகம்’ படத்தை இயக்கிய மனோஜ் பீதா இயக்கியுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கில் நவீன் பாலிஷெட்டி மற்றும் ஸ்ருதி ஷர்மா நடிப்பில் வெளியான ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ என்ற படத்தின் ரீமேக்.

Santhanam

இந்த படத்தில் நடிகை ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ராம்தாஸ், இந்துமதி, மதன் தட்சிணாமூர்த்தி, ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

இந்த ஆண்டு தொடக்கத்தில் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தின் டீசர் வெளியானது. இந்த படத்தில் சந்தானம் டிடெக்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லரை நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.

‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படம் வருகிற நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த டிரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


 

From Around the web