உலகமே எதிர்பார்த்து கொண்டிருந்த அவதார் 2 படத்தின் ட்ரைலர் வெளியானது..!! 

 
1

 2009-ஆம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘அவதார்’. 3டி வரலாற்றில் புதிய பரிணாமத்தை தெட்ட இந்த படத்தை உலகமே வியந்து பார்த்தது. சுமார் 500 கோடியில் உருவான இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி 15 ஆயிரம் கோடி வசூலை அப்போதே குவித்தது. அதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அவதார் படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும்,  கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களும், பிரம்மாண்ட காட்சிகளும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. 

1

இதையடுத்து 13 ஆண்டுகள் கழித்து அவதார் படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் மாதம் 22-ஆம் தேதி கிறிஸ்துமசையொட்டி  வெளியாகவுள்ளது. சுமார் 2 ஆயிரம் கோடியில் உருவாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் சுமார் 160 மொழிகளில் வெளியாகிறது. இந்த படம் முதல் பாகத்தை விட நிச்சயம் வசூல் சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், அடுத்தடுத்த பாகங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியாகும் என்றும் அவதார் 4 வரை ரிலீசாகும் என அறிவித்துள்ளார்.

1

Avatar The Way Of Water எனும் தலைப்பில் உருவாகி உள்ள அவதார் 2ம் பாகத்தின் டிரைலர் முழுக்க தங்களது குடியிருப்பை போரில் இழந்த அவதார் வாசிகள் புதிதாக நீர் நிலைகளில் வாழ தங்களை பழக்கிக் கொள்கின்றனர். அங்கே அவர்களுக்கு என்ன விதமான ஆபத்து வருகிறது. பறக்கும் மீன்களுக்கு மேல் சவார் செய்து ஜேக் சுலிவன் எப்படி அந்த மக்களை காப்பாற்றுகிறார் என்கிற அவதார் படத்தின் கதையை டிரைலரில் காட்டி உள்ளார் ஜேம்ஸ் கேமரூன்.


 

From Around the web