ஒழுக்கத்தை விட்டோம் எல்லாம் நாசமா போய்டும் - செல்வராகவனின் வெறித்தனமான நடிப்பில் வெளியான ‘பகாசூரன்’ டிரைலர்..!!

இயக்குனர் மோகன் ஜி தற்போது ‘பகாசூரன்’என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகர் நட்டி நட்ராஜ் இருவரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் ராதாரவியும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்திற்கு இசை சாம் சிஎஸ், ஒளிப்பதிவு ஃபரூக் ஜே பாஷா, படத்தொகுப்பு தேவராஜ் எஸ்.
இந்த நிலையில் படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது அதில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றம், அது தொடர்பான சிக்கல், அரசியல் அதிகாரம், அதிக்கம், கலாச்கார சீர்கேடு என மிக அழுத்தமாக சொல்லப்பட்டுள்ளது, டிரைலர் படத்தின் எதிர்பார்பை எக்கச்சக்காக எகிறவைத்துள்ளது. வழக்கம் போல மிரட்டலான நடிப்பை பதிவு செய்துள்ளனர், செல்வராகவன்
நட்டியின் ஒரு வரி உள்ளது, அதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் மற்றும் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார். அதிரடி காட்சிகளை மிரட்டல் செல்வாவும், ஸ்டண்ட் காட்சிகளை அமைத்துள்ளனர்.