கி.பி.1000, 1500, 1980 என மூன்று காலகட்டங்களில் கதை ட்ராவல் ஆகும் 'பாம்பாட்டம்' ட்ரைலர் வெளியானது..!! 
 

 
1

இயக்குனர் வி.சி.வடிவுடையான், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் 'பாம்பாட்டம்'. இப்படத்தில் 'திருட்டு பயலே', 'நான் அவனில்லை' புகழ் ஜீவன் இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும், மல்லிகா ஷெராவத், ரித்திகா சென், யாஷிகா ஆனந்த், சாய் ப்ரியா, சுமன், கிரிக்கெட் விளையாட்டு வீரர் சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரமாண்டமாக தயாரித்துள்ள 'பாம்பாட்டம்' திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.

கி.பி.1000, 1500, 1980 என மூன்று காலகட்டங்களில் கதை டிராவல் ஆகும். இதற்கான செட், உடைகள், அந்தந்த காலக்கட்டத்தை கண்முன் நிறுத்தும் சூழ்நிலை என நிறைய மெனக்கெடல் இருந்தது. மும்பையில் பலகோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து படமாக்கினோம். படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும். போர்க் காட்சிகளுக்காக பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கான குதிரைகள் பயன்படுத்தப்பட்டன. மும்பை தவிர, சென்னை, மைசூர் அரண்மனை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம்." என இப்படம் குறித்து இயக்குனர் வி.சி.வடிவுடையான் கூறினார்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியானது.

 

From Around the web