உன்ன மாதிரி ஆஃபீசர் என்னோட கேஸ்-ல் ஒர்க் பண்றதுல எனக்கு விருப்பம் இல்ல - வெளியான ‘டி.ஆர்.56’ படத்தின் டிரெய்லர்..!!
Nov 22, 2022, 08:05 IST

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டும் நடித்து வரும் பிரியாமணி,தற்போது ‘டி.ஆர்.56’ என்ற படத்தில் நடித்துள்ளார். க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரியாமணி சிபிஐ அதிகாரியாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் பிரவீன், தீபக் ராஜ் ஷெட்டி, ரமேஷ் பட், யத்திராஜ், வீணா பொன்னப்பா, மஞ்சுநாத் ஹெக்டே, சுவாதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள பிரவீன் ரெட்டி. படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு நோபின்பால் இசையமைத்து வருகிறார்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது