கிட்டு இயக்கத்தில் உருவான 'சல்லியர்கள்' படத்தின் ட்ரைலர் வெளியானது..!! 

 
1

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர்  வே. பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக வைத்து உருவான திரைப்படம் ‘மேதகு’. இலங்கையில் தமிழர்ளுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியை சிறு வயது முதல் பார்த்து கோபமடைந்த ஒரு இளைஞன் எப்படி தனது இனத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தும் முடிவுக்கு வருகிறான் என்பதை மிகவும் யதார்த்தமாக இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பிறகு அவரின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள படம் ‘சல்லியர்கள்’. 

இந்த படத்தில் டாக்டர் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் சத்யா தேவி என்பவர் நடித்துள்ளார். இவரை தவிர மற்ற அனைவருமே புதுமுகங்களாக நடித்துள்ளனர்.  இப்படத்தில் கருணாஸ் மகன் கென் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். 

தமிழீழ விடுதலை போர்க்களத்தில் மருத்துவம் பார்க்கப்பட்டது எப்படி என்றும், அங்கு பணியாற்றி தமிழ் மருத்துவர்கள் பற்றியும் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

From Around the web