நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ட்ரைலர் வெளியானது ..!

 
1

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது. இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், டான்ஸிங் ரோஸ் ஷபீர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் முதல் பார்வையை பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார். 

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து வழங்கும் வெளிவரும் நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு கிஷோர் குமாரின் ஒளிப்பதிவில், டென்மா இசையமைத்துள்ளள்ளார்.

வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த ட்ரைலர் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

From Around the web