ஜெயமோகன் எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட "ரத்த சாட்சி" படத்தின் டிரெய்லர் வெளியானது..!! 

 
1

பிரபல தமிழ் எழுத்தாளரான ஜெயமோகன் எழுதிய ‘கைதிகள்’ சிறுகதையை வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்த சாட்சி’. நக்சல் பாரி இயக்க வரலாற்றுடன் படம் 1980களில் நடப்பது போல் எடுக்கப்பட்டுள்ளது. ஜெயமோகனின் கதைக்கு திரைக்கதை எழுதி, ரபிக் இஸ்மாயில் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமர வேல், கல்யாண் மாஸ்டர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

 இந்த படத்தை ஆஹா தமிழ் ஓடிடியுடன் இணைந்து மகிழ் மன்றம் தயாரித்துள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகரம் படத்திற்கு இசையமைத்த ஜாவித் ரியாஸ் என்பவர் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். ரத்த சாட்சி படம் நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியானது.

 

From Around the web