திகில் படமாக உருவாகியுள்ள ஜோதி படத்தின் ட்ரைலர் வெளியீடு ..!! 

 
1

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் வெற்றி..  அவர் நடிப்பில் வெளியான ‘8 தோட்டாக்கள்’, ‘ஜீவி’, கேர் ஆப் காதல் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது மெமரீஸ், வனம், தீங்கிரை, ரெட் சாண்டல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதேபோன்று பெயரிடாத சில படங்களிலும் வெற்றி நடித்து வருகிறார்.

1

இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜோதி’. இந்த படத்தில் வெற்றிக்கு ஜோடியாக ‘மண்டேலா’ படத்தின் கதாநாயகி ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். 
மேலும் இந்த படத்தில் கிரிசா குரூப், சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திகில் படமாக உருவாகியுள்ள இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. எஸ்.பி.ராஜா சேதுபதி என்பவர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹர்ஷவர்தர் ரமேஷ்வர் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படம் வரும் ஜூலை 28-ஆம் தேதி வெளியாகிறது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 

From Around the web