மிக பிரம்மாண்ட படமான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது..!!
Sep 7, 2022, 07:05 IST

இயக்குனர் மணிரத்னம் தனது கனவுத் திட்டமான 'பொன்னியின் செல்வன்' நாவலை திரைப்படமாக உருவாக்கி வருகிறார். தற்போது முதல் பாகம் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்து வருகின்றனர். முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது
இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியானது