ஆசியாவின் முதல் ஸ்பிளிட் திரைப்படமாக உருவாகியுள்ள பிகினிங் படத்தின் ட்ரைலர் வெளியானது..!!

விஜயா முத்துசாமி தயாரித்துள்ள திரைப்படம் " பிகினிங்", இந்தப் படம் ஆசியாவின் முதல் ஸ்பிளிட் ஸ்கிரீன் திரைப்படமாக உருவாகியுள்ளது.
இந்த படத்தில் வினோத் கிஷன் மற்றும் கௌரி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார், கே.எஸ். வீர குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், சிஎஸ் பிரேம் குமார் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
இந்த படம் ஆசியாவின் முதல் ஸ்பிளிட் திரைப்படமாக உருவாகியுள்ளதால் படம் நிச்சயம் ரசிகர்களை ஈர்க்கும் என படக்குழு தெரிவித்துள்ளனர். அதாவது ஸ்பிளிட் திரைப்படம் என்றால், இரு வேறு படத்தின் காட்சிகள் ஒரு திரையில்,சரிபாதி திரையாக, ஒரே சமயத்தில் ஒளிபரப்பாகும். இன்று படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. டிரைலரும் ஸ்பிளிட் ஸ்கிரீனில் வெளியாகி படத்தின் மீதான் எதிர்பார்பை அதிகரித்துள்ளது.