இவ்ளோ கொலைகளையும் ரசிச்சு ரசிச்சு பண்ண சைக்கோ கொலைகாரனின் கதை - வெளியான  ‘தீன்கிரை’ படத்தின் டிரெய்லர்..!!

 
1

நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் வெற்றி ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘தீன்கிரை’. சஹானா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.கே.குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு பிரகாஷ் நிக்கி இசையமைக்க, கிரண் கௌசிக் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்த படத்தின் கதாநாயகியாக அபூர்வா ராவ் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி நடித்துள்ளார். சைக்கோ க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகள் முன்பே முடிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

From Around the web