உன்ன பத்தி நான் சொல்லியே ஆகணும் தம்பி - வேற லெவெலில் வரவேற்பை பெறும் “வரலாறு முக்கியம்” படத்தின் ட்ரைலர் ..!!
நடிகர் ஜீவா மீண்டும் ஒரு புதிய ரோம்-காம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் சந்தோஷ் ராஜன் எழுதி இயக்குகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் RB சௌத்ரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
படத்திற்கு 'வரலாறு முக்கியம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் நடிகை காஷ்மீரா பர்தேஷி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் பிரக்யா நாகரா, VTV கணேஷ், K.S.ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, TSK, E ராமதாஸ், லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ் ஷான் ரஹ்மான் இசையமைக்கிறார். மதன் கார்க்கி, சந்தோஷ் ராஜன் இருவரும் பாடல்கள் எழுதியுள்ளனர்.
இந்நிலையில் வரலாறு முக்கியம் படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முழுக்க முழுக்க காமெடி ஜோனரில் தயாராகியுள்ள இந்த படம் டிசம்பர் 9 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.