90'ஸ் கிட்ஸ்-ஐ கலங்க வைத்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் டிரைலர்..!! 

 
1

ரசிகர்களுக்கு கோடை விருந்தாக ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய தயாராகி வருகிறது காத்துவாக்குல ரெண்டு காதல்.படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், மேலும் இந்த படத்தின் இளைய திலகம் பிரபு, ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன் மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். 

 'நானும் ரௌடிதான்' படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்த கூட்டணியில் சமந்தாவும் இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.தமிழில் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.

கண்மணி கதாபாத்திரத்தில் நயன்தாராவும், கதிஜா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரையும் காதலிப்பவராக விஜய்சேதுபதி இந்தப் படத்தில் நடித்துள்ளார்.இரு பிள்ளைகளுக்கு தாயான நயன்தார ஒருபுறமும், சமந்தா மறுபுறமும் என இருவரை காதலிக்கும் நாயகன் இறுதியாக யாரை கைப்பிடிப்பார் என்னும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படத்திலிருந்து தற்போது டிரைலர் வெளியாகியுள்ளது.

From Around the web