பொம்மை நாயகின்னு சாமி பேரு வெச்சிட்டு என்னை ஏன் கோவிலுக்கு கூட்டிட்டு போக மாட்டேங்கற - வெளியான பொம்மை நாயகி படத்தின் ட்ரைலர்..!!  

 
1

பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் ‘பொம்மை நாயகி‘. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் தன் மகளுக்காக போராடும் ஒரு தந்தையின் போராட்டம்தான் இந்த படத்தின் கதை. 

இந்த படத்தில் யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்திலும், அவரது மகளாக ‘சூப்பர் சிங்கர்’ புகழ் ஸ்ரீமதி நடித்துள்ளார். பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஷான் இயக்கி வருகிறார்.சுந்தரமூர்த்தி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.  

இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது இந்த படத்தின்  ட்ரைலர் வெளியாகியுள்ளது.

From Around the web