வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகிய 'ஜீவி 2' படத்தின் டிரெய்லர் வெளியானது..!! 

 
1

வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமாகி வருபவர் நடிகர் வெற்றி. அந்த வகையில் அவர் நடித்த ‘ஜீவி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இதன் இரண்டாம் பாகம் ‘ஜீவி 2’ என்ற பெயரிலேயே உருவாகி வருகிறது.

பேண்டஸி த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்தை விஜே கோபிநாத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார். இவர்களுடன் கருணாகரண், மை கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யாரும் கேள்விப்படாத புதியதொரு கோணத்தில் இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. முதல் பாகம் போன்று முக்கோண கதையாக உருவாகியுள்ள இந்த டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி இந்தப் படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. 

From Around the web