பிரபல டிவி பிரபலத்தின் மனைவி திடீர் மரணம்!

 
1

பல சீரியல்களுக்கு கதாநாயகனாக நடித்தவர் நடிகர் பரத் கல்யாண். இவர் நடித்த அனைத்து சீரியல்களும் டாப் ஹிட் சீரியல்களில் இடம்பெற்றது. இவர் பல முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். இதை தவிர யாக்கா, சிருங்காரம், பாட்டாளி, பார்த்த ஞாபகம், சுள்ளான் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

90-களில் வெளியான சொந்தம் சீரியல் முதல் 2010-ல் வெளியான வம்சம் வரை இவரது கதாபாத்திரங்கள் அனைத்தும் தனித்துவமாக இருக்கும். தற்போது ஹாட் ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பாகி வரும் கனா காணும் காலங்கள் 2 வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவருடைய மனைவி பிரியதர்ஷினி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். இவரது இறுதி சடங்கு நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பரத் கல்யாண் - பிரியா தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். 

Bharat kalyan

பிரியாவின் திடீர் மரணம் அவருடைய ஒட்டுமொத்த குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From Around the web