விஷால் படத்தின் படத்தின் டீசர் வெளியாவதில் சிக்கல்.!

 
1

'ராணா புரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா தயாரித்திருக்கும் படம் லத்தி. இதனை புதுமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை அடுத்து 'லத்தி' திரைப்படத்தின் டீசர் நேற்று (19-07-2022) மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதன் டீசர் வெளியிடும் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 'லத்தி' திரைப்படத்தின் டீசர் 24-07-2022 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

1

தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் தயாராகி வரும் இப்படம் விஷாலின் முதல் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் டீசர் வரும் ஜூலை 24-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி டீசரின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடி காட்டும் போலீசாக களமிறங்கும் விஷாலின் காட்சிகள் இந்த முன்னோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. 

From Around the web