எல்லார்க்குள்ளையும் ஒரு திருடன் இருக்கான்... ஜஸ்ட் ஒரு சான்ஸ்காக தான் வெயிட்டிங்.. வெளியான விஜய்சேதுபதியின் ‘ஃபார்ஸி’ டிரெய்லர்!!  

 
1

அமேசான் ப்ரைமில் வெளிவந்து பெரும் ஹிட் ஆன சீரிஸ் ‘த ஃபேமிலி மேன்’. இந்தி மொழியில் உருவான இந்த சீரிஸ் இரண்டு சீசன்களாக எடுக்கப்பட்ட நிலையில் சமந்தாவின் நடிப்பில் வெளியான இரண்டாவது சீசனும் பெரும் ஹிட் ஆனது.

Farzi

இந்த நிலையில், மெகா ஹிட் அடித்த ஃபேமிலி மேன் சீரிஸின் இயக்குநர்கள் ராஜ் & டிகே அடுத்ததாக இயக்கும் ‘ஃபார்சி’ வெப் சீரிஸின் டிரெய்லர்  வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தின் மூலம் கத்ரினா கைஃப் உடன் பாலிவுட் சினிமாவில் அறிமுகமான விஜய் சேதுபதி, தற்போது ஃபார்சி சீரிஸின் மூலம் வெப் சீரிஸ் உலகில் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில், மல்ட்டி ஸ்டாரர் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் விஜய் சேதுபதி,  ஷாஹித் உடன் இணைந்தது நடித்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

8 எபிசோடுகளைக் கொண்டு க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள ஃபார்சி தொடர், பிப்ரவரி 10-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ளது.

தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் இந்த சீரிஸ் வெளியாகும் நிலையில், விஜய் சேதுபதி தன் சொந்தக் குரலிலேயே இந்தியில் பேசி நடித்துள்ளது அவரது கோலிவுட் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

From Around the web