பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யாவுக்கு பதிலா இந்த நடிகை தான் முதலில் மணிரத்தினம் தேர்ந்தெடுத்தாராம்..!! 

 
1

தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. புகழ்பெற்ற வரலாற்று நாவலான ‘பொன்னியின் செல்வன்’  திரைப்படமாக உருவாகியிருப்பதுதான் இந்த எதிர்பார்ப்புக்கு காரணம். பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளளார். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் இருபாகங்களாக உருவாகி வெளியாகவுள்ளது. 

ps1

இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், திரிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராய் நந்தினி வேடத்தில் நடித்துள்ள ரோலுக்கு வேறொரு நடிகையை தன் முதலில் மணிரத்தினம் ஒப்பந்தம் செய்துள்ளாராம். பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றில் ஐஸ்வர்யாராய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நந்தினி மற்றும் அவரது ஊமை தாய் மந்தாகினி தேவியாக வருகிறார் ஐஸ்வர்யா ராய்.

முன்னதாக கடந்த ஜூலை மாதம் ஐஸ்வர்யாராயின் நந்தினி கதாபாத்திரம் குறித்த ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பழிவாங்கும் முகம் அழகானது என்ற தலைப்புடன் போஸ்டர் வெளியிடப்பட்டது. படத்தில் பழுவூர் ராணியாக இவர் நடித்துள்ளார். ஐஸ்வர்யாராய்க்கு பதிலாக முன்னதாக இந்த கேரக்டரில் நடிக்க ரேகாவை தான் முடிவு செய்து இருந்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் மணிரத்தினம் கூறியுள்ளார்.

From Around the web