தம்பி ராமையாவா இது..!! நம்பவே முடியலே   

 
1

தமிழ் சினிமாவில் சிறந்த குணசித்திர நடிகராக இருக்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதி இயக்கும் திரைப்படம் ‘ராஜாகிளி’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் இயக்குனராக உமாபதியும், கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை தம்பி ராமையாவும் அமைத்துள்ளனர். 

பிரபல இயக்குனரான சமுத்திரகனி இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், மியாஸ்ரீ சவுமியா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், பழ கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், பிரவீன், இயக்குனர் மூர்த்தி, ‘கும்கி’ அஸ்வின், ரேஷ்மா, வெற்றிக்குமரன், ‘கும்கி’ தரணி, தீபா, பாடகர் கிரிஷ் ஜி.பி.முத்து உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் வித்தியாசமான லுக்கில் தம்பி ராமையாவும், சமுத்திரகனியும் உள்ளனர்.

1

From Around the web