"இது தான் தளபதி".... ரசிகர்களை நெகிழ வைத்த தளபதி விஜய்..!!
வம்சி பைடிப்பள்ளி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் விஜய் நடித்துள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. தமிழ்நாட்டில் அதிக தியேட்டர்களில் வாரிசு வெளியாக உள்ளது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்துள்ளார்.
விஜய்க்கு தெலுங்கிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். இதனால் வாரிசு படத்தை ஆந்திரா, தெலுங்கானாவிலும் கூடுதல் தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டு உள்ளனர். இதற்கு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் எதிப்பு தெரிவித்து உள்ளது. பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தியேட்டர் அதிபர்களை வற்புறுத்தி உள்ளது.
ரசிகர்களை சந்தித்தார் நடிகர் விஜய்
— A1 (@Rukmang30340218) December 13, 2022
#Vijay #Varisu #Thalapaathy67 pic.twitter.com/JjPjcOiMp5
இந்த நிலையில், கடந்த மாதம் 20-ம் தேதி சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் தனது ரசிகர்களை விஜய் சந்திதார். அதில், நாமக்கல், சேலம், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார். இந்நிலையில், இரண்டாவது கட்டமாக இன்று செங்கல்பட்டு, அரியலூர், கடலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்தார். இவர்களுக்கு மதிய உணவாக மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது.
ரசிகர்களை சந்திக்க கருப்பு நிற உடையில், புதிய ஹேர்ஸ்டைலுடன் வந்த விஜய்யை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அப்போது அங்கு வந்த மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை நடிகர் விஜய் தன் கைகளால் தூக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார். தற்போது, இது வைரலாகி வருகிறது.