வாரிசு படத்தில் தளபதி விஜய்யின் பெயர் இது தான்..!!

 
1

விஜய்யின்  வழக்கமான ஆக்ஷன் படமாக இல்லாமல் குடும்ப சென்டிமென்ட்டில் உருவாகி வரும் திரைப்படம் 'வாரிசு'. மூன்று அண்ணன் ஒரு தம்பி என்று குடும்ப கதையாக இப்படம் உருவாகி வருவதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை வம்சி படைப்பள்ளி இயக்கி வருகிறார். நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், சரத்குமார், குஷ்பூ, சங்கீதா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.. சமீபத்தில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.இந்நிலையில் இப்படத்தில் விஜயின் பெயர் என்ன என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ராஜேந்திரன் என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

From Around the web