நடிகர் விஷால்- ஆ இது..!! நெத்தியில் பட்டை, கையில் துப்பாக்கியுடன் மாஸாக வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!! 

 
1

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.  மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். 

இந்த படத்தில் விஷால் மற்றும் எஸ்.சூர்யா என இருவருமே இரட்டை வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டு காலக்கட்டத்தில் உருவாகிறது. அதாவது 1970-களில் நடப்பது போன்றும், தற்போதைய கதைக்களத்திலும் உருவாகிறது. அதனால் படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

Mark Antony

விஷால் இந்தப் படத்தில் முற்றிலும்  மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் விஷால் முதன்முறையாக தாடியுடன் காணப்படுகிறார். மேலும் நெத்தியில் பட்டை, கையில் துப்பாக்கி என மாஸ் காட்டுகிறார். இன்று விஷால் பிறந்ததினம் என்பதால் அவருக்கு பிறந்தநாள் ஸ்பெஷல் ட்ரீட் ஆக இந்தப் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

From Around the web