இது வேற லெவல்...!! இணையத்தை மிரட்டி வரும் யசோதா டீசர்..!! 

 
1

நடிகை சமந்தா தற்போது ஹரி சங்கர் மற்றும் ஹனீஷ் நாராயண் இருவரும் இணைந்து இயக்கும் யசோதா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மணி ஷர்மா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படம் அறிவியல் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. 

இந்தப் படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார்,உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்..சமந்தாவுக்கு இந்திய அளவில் தற்போது மார்க்கெட் பெருகியுள்ளதால் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

 இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த டீசரை பார்க்கும் போது ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது .

From Around the web