இவர் தான் என் காதலன்... அறிமுகப்படுத்தினார் ரகுல் ப்ரீத் சிங்..!!
தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, தேவ், என்.ஜி.கே. ஸ்பைடர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம்’ படத்தின் மூலம்தான் மிகவும் பிரபலமானார். அதன்பிறகு சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தமிழை தவிர தெலுங்கு, இந்தி படங்களிலும் பிசியாக நடித்து வரும் இவர், சமீபத்தில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும், நடிகருமான ஜாக்கி பாக்னானியை காதலிப்பதாக வெளிப்படையாக அறிவித்தார். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் திருமணம் எப்போது என்று கேள்வி எழுப்பி வந்தது.

சமீபத்தில் தனது காதலருடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாடிய வீடியோவையும் வெளியிட்டார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலர் ஜாக்கி பாக்னானியுடன் இருக்கும் புகைப்படங்களை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ளார். அதில் சான்ட்டா கொடுத்த மிகப்பெரிய கிப்ட் காதலர் ஜாக்கி தான் என்று ரகுல் கூறியுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 - cini express.jpg)