ஆலியா பட் குழந்தையின் பெயர் இது தான் - இன்ஸ்டாவில் அறிவித்த பாலிவுட் ஜோடி..!! 

 
1

ரன்வீர் கபூர் மற்றும் ஆலியா பட் சில ஆண்டுகளாக காதலித்த வந்து கடந்த ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். பிரம்மாண்டமான நடைபெற்ற இந்த திருமணத்தில் திரையுலகின் முக்கிய பிரபலங்கள் கலந்துக்கொண்டு வாழ்த்தனர்.

இதையடுத்து ஆலியா பட் மற்றும் ரன்வீர் ஜோடிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தைக்கு சூப்பரான பெயர் ஒன்றை ஆலியா பட் வைத்துள்ளார். அதன்படி தனது குழந்தைக்கு ராஹா என்று ஆலியா பெயர் வைத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஆலியாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

1

ரஹாவின் பாட்டி நீது கபூர் தான் அவளது பெயரை தேர்வு செய்துள்ளார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ராஹாவுக்கு ஒரு கால்பந்து ஜெர்சியை தயார் செய்து, அதில் அவளது பெயரை பிரிண்ட் செய்து, அந்தப் படத்தை ஆலியா இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார். தவிர அவளது தந்தை ரன்பீர், மிகப்பெரிய கால்பந்து ரசிகர். ராஜ் கபூர், ரந்தீர் கபூர், ரிஷி கபூர், ரன்பீர் கபூர் மற்றும் அவரது சகோதரி ரித்திமா கபூர் சஹானி என கபூர் குடும்பத்தில் 'ஆர்' என்று தொடங்கும் பெயர்களை வைக்கும் மரபு உள்ளது. 

இது குறித்து இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ள ஆலியா, "ரஹா (அவளது புத்திசாலி மற்றும் அற்புதமான பாட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்) என்ற பெயருக்கு பல அழகான அர்த்தங்கள் உள்ளன... ரஹா, தூய்மையான வடிவத்தில் தெய்வீக பாதை என்று பொருள். சுவாஹிலி மொழியில் மகிழ்ச்சி, சமஸ்கிருதத்தில், ராஹா ஒரு குலம், பெங்காலியில் - ஓய்வு , ஆறுதல், நிவாரணம். அரபு மொழியில் அமைதி. மகிழ்ச்சி, சுதந்திரம் மற்றும் பேரின்பம் என்றும் இந்த பெயர் பொருள்படும். அவளுடைய பெயருக்கு உண்மையான அர்த்தத்தை, நாங்கள் அவளை பெற்ற முதல் நொடியிலிருந்து உணர்ந்தோம்! எங்கள் குடும்பத்தை உயிர்ப்பித்ததற்கு நன்றி ராஹா. நம் வாழ்க்கை இப்போதுதான் தொடங்கியது போல் உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

From Around the web