பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவின் அடுத்த திட்டம் இது தான்..!! 

 
1

பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு.இயக்குநர் அமீர் நடித்த யோகி படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகம் ஆனவர். அதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபாவிலும் யோகி பாபு சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து, நடிகர்கள் விஜய், அஜீத், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் இணைந்து கலக்கிய யோகி பாபு, இயக்குநர் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் நடிகை நயன்தாராவுடன் இணைந்து நடித்து அனைவரையும் ஆச்சிரியத்துக்குள்ளாக்கினார்.

யோகி பாபு நடித்த தர்மபிரபு, கூர்கா போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. சமீபத்தில் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்து வெளியான மண்டேலா திரைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

1

இந்நிலையில், நடிகர் யோகி பாபு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:

நான் நடிகர் வடிவேலுவின் தீவிர ரசிகன். அவருடன் சேர்ந்து நடிக்க நான் ஆசைப்படுகிறேன். விரைவில் கட்டாயமாக அவருடன் சேர்ந்து நடிப்பேன். நான் கதை, வசனம் எழுதி ஒரு படம் இயக்க உள்ளேன். அதற்கு இன்னும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை, தயாரிப்பாளர் கிடைத்ததும் படம் இயக்குவேன்.

From Around the web