செல்லம்மா சீரியலை விட்டு வெளியேறுவதற்கு காரணம் இது தான் - நடிகை திவ்யா கணேஷ்..!!

 
1

விஜய் டிவியில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியல் சமீப காலங்களாக சுவாரஸ்யமான கதைய அம்சத்துடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது.

அதாவது பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை திவ்யா கணேஷ்.இவர் ஏற்கனவே லட்சுமி வந்தாச்சு, சுமங்கலி போன்ற பல தொடர்களில் நடித்து இருக்கிறார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி தொடர் மூலம் தான் மக்கள் மத்தியில் அறிமுகமானார். தற்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் தனெக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருக்கிறார். அதேபோல் திவ்யா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா என்ற தொடரிலும் மேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது திவ்யா செல்லம்மா தொடரிலிருந்து விலகி உள்ளாராம் அவருக்கு பதில் நடிகை ஸ்ரேயா என்பவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அந்த எபிசோடும் சீரியலில் ஒளிபரப்பாகி இருக்கிறது.

1

இப்படி ஒரு நிலையில் செல்லம்மா தொடரில் இருந்து வெளியேறிய காரணம் குறித்து பேசி இருக்கும் திவ்யா ‘என்னுடைய சொந்த பிரச்சனையால் நான் அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் நான் அப்படி சொல்ல மாட்டேன். என்னுடைய சொந்த விஷயத்தினால் நான் வெளியேறவே இல்லை. என்னை அங்கே சிலர் வேலை செய்ய விடாமல் சிலர் தொந்தரவு செய்வதால் தான் இந்த சீரியலில் இருந்து விலகுகிறேன்’ என்று கூறியுள்ளார் திவ்யா.

From Around the web