சூப்பர்ஸ்டார் ரஜினியின் புதிய படத்தின் டைட்டில் இது தான்..!! 

 
1
'அண்ணாத்த' படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். 

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இந்த படத்திற்கான திரைக்கதை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் கதை ஜெயில் தொடர்புடையது என்றும், அதனால் படத்திற்கு ஜெயிலர் என தலைப்பு வைக்கப்படலாம் சில தினங்களுக்கு முன் செய்திகள் வந்தன.

Jailer

இதனிடையே நெல்சன் இயக்கிய பீஸ்ட் படம், கலவையான விமர்சனங்களை பெற்றதால் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவாரா என்ற கேள்வி எழுந்தது. எனினும் நடிகர் ரஜினியின் 169-வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குவது உறுதியானது.

இந்நிலையில் இன்று(ஜூன் 17) ரஜினி பட தலைப்பை அறிவித்துள்ளனர். அதன்படி படத்திற்கு ‛ஜெயிலர்' என பெயரிட்டு போஸ்டர் வெளியிட்டுள்ளனர். அதில் நீண்ட கத்தி ஒன்றும், அதில் ரத்தம் படிந்தும் காணப்படுகிறது.


 


தற்போது இந்த டைட்டில் போஸ்டர் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

From Around the web