இதனால் தான் மைனா நந்தினி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லையாம்..!! 

 
1

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிநதுள்ளது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் நேற்று  முதல் கோலாகலமாக தொடங்கியது.முதல்போட்டியாளராக பலரது யூகங்களிலும் இடம்பிடித்திருந்த யூடியூபர் ஜி.பி.முத்து வந்தார் . 

அதன் பின் வசந்த், சுயாதீன ராப் பாடகர்,ஷிவின் கணேசன், மாடல், சின்னத்திரை நடிகர் அசீம்,நடன இயக்குனர் ராபர்ட், சின்னத்திரை நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, சின்னத்திரை நடிகரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரருமான மணிகண்டன்,சின்னத்திரை பிரபலமான ரச்சிதா மகாலட்சுமி,மாடல் ராம் ராமசாமி,ஆர்யன் தினேஷ் கனகரத்னம் - ஏடிகே, ராப் பாடகர்,இலங்கையைச் சேர்ந்த ஜனனி, தொலைக்காட்சி தொகுப்பாளர், நடனக்கலைஞர் ஷாந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் விக்ரமன், பிரபல நகைச்சுவை கலைஞரான அமுதவாணன்,தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து, 'விக்ரம்' திரைப்படத்தில் நடித்திருந்த மகேஸ்வரி,தொகுப்பாளர் கதிரவன், வளரும் திரைக் கலைஞர் குயின்ஸீ ஸ்டான்லி,சிங்கப்பூர் மாடலான நிவிஷினி, தனலட்சுமி, டிக் டாக்கர்
என மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.  

இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் டிவி புகழ் மைனா நந்தினி கலந்துகொள்ளாதது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது .

இந்நிலையில் நந்தினி ஏன் கலந்து கொள்ள வில்லை என்பதற்கான தங்கள் வெளியாகியுள்ளது . பிரபல நட்சத்திர ஓட்டலில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவருக்கு திடீரென கொரோனா இருப்பது தெரியவந்ததையடுத்து அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது. இருப்பினும் அவர் நிகழ்ச்சியின் பாதியில் சர்ப்ரைஸ் என்று ஆக செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மைனா நந்தினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் இவரும் ஒருவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web