சென்னையில் ஷூட்டிங்கை நடத்தியதால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பலன் பெற்றார்கள் - டைரக்டர் அட்லீ..!!

 
1

தளபதி விஜய் நடிப்பில் பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அட்லி பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

கடந்த ஒரு மாதமாக ஜவான் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்த நிலையில், ஷாருக்கான் சென்னை அனுபவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அவர் தனது பதிவில், “என்ன அழகான 30 நாட்கள் ஷூட்டிங் சென்னையில் நடந்தது!! தலைவர் ரஜினிகாந்த் எங்கள் படப்பிடிப்பு தளத்துக்கு வந்ததை, ஆசீர்வாதமாய் உணர்கிறேன்.

1

நயன்தாராவுடன் நடித்தது, அனிருத்துடன் பார்ட்டி கொண்டாட்டம், விஜய் சேதுபதியுடன் நீண்டநேர கருத்துப் பரிமாற்றம், தளபதி விஜய் எனக்கு அளித்த சுவையான உணவு இவற்றை மறக்க முடியாது. எனக்கு நல்ல வரவேற்பு அளித்த அட்லீ மற்றும் பிரியாவிற்கு நன்றி. இப்போது சிக்கன் 65 ரெசிபியை சமைக்க கற்றுக் கொண்டிருக்கிறேன்.” என்று அதில் கூறியிருந்தார்.


இந்நிலையில், ஷாருக்கானின் ட்வீட்டிற்கு பதிலளித்துள்ள அட்லி, “நன்றி சார். உங்களை சென்னையில் வரவேற்றதை கௌரவமாக கருதுகிறேன். எனது சினிமா கேரியரில் மறக்க முடியாத நாளாக ஜவான் சென்னை ஷூட்டிங் அமைந்துவிட்டது. சென்னையில் ஷூட்டிங்கை நடத்தியதால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பலன் பெற்றார்கள். இதற்காக மிக்க நன்றி சார். நீங்கள் என்றைக்குமே ராஜாதான். உங்கள் குணத்திற்கு தலை வணங்குகிறேன். விரைவில் உங்களை மும்பையில் சந்திக்கிறேன் சார்.’ என்று கூறியுள்ளார்.

From Around the web