இளைஞர்களை குறிவெச்சு பணம் சம்பாதிக்க ஒரு கூட்டம் சுத்திகிட்டு இருக்குது - ஆக்சன் த்ரில்லர் ஜானரில் வெளியான துடிக்கும் கரங்கள் டீஸர்..!!
Nov 19, 2022, 07:05 IST
நடிகர் விமலுக்கு விலங்கு வெப் சீரிஸ் பெரும் வெற்றியை பெற்றுத் தந்தது. அதையடுத்து தற்போது விமல் மீண்டும் கம்பேக் கொடுக்கத் துவங்கியுள்ளார். அந்த வகையில் விமல் புதிதாக நடித்துள்ள திரைப்படம் ‘துடிக்கும் கரங்கள்’. இந்த படத்தை வேலுதாஸ் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தை ஓடியன் டாக்கீஸ் சார்பில் கே அண்ணாதுரை தயாரித்து வருகிறார்.
இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக மும்பை மாடல் மனிஷா நடிக்கிறார். இவர்களுடன் சுரேஷ் மேனன், சதிஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பிரபல இசையமைப்பாளர் மணிசர்மாவின் சகோதரர் ராகவ் பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.