விரைவில் ஓடிடியில் திருச்சிற்றம்பலம்..!! அதிகாரபூர்வ அறிவிப்பு..!! 

 
1

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. நித்யாமேனன், ராஷிகண்ணா, ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக மாறியது.  ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக தியேட்டர்க்கு வந்து ரசித்தனர்..  

நித்யா மேனன் தோழியாக வந்து அசத்தியுள்ளார். பிரகாஷ் ராஜ் மற்றும் பாரதிராஜா ஆகிய இருவரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தனுஷுக்கு ஜோடியாக நடித்த ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் தங்களுக்கான கதாபாத்திரத்தில் ஐக்கியமாகியுள்ளனர். இதுதவிர அனிரூத் இசை படத்திற்கு எப்போதும் போல எனர்ஜியாக உள்ளது. 

இந்நிலையில் சமீபத்தில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படம் விரைவில் ஓடிடியில் வெளியாகிறது .இப்படம் வரும் 23 ஆம் தேதி சன் நெக்ஸ்ட்-யில் வெளியாகிறது   

1

From Around the web