இன்று சினிமா டிக்கெட் 75 ரூபாய்க்கு கிடையாதாம்..!! வேற ஒரு தேதிக்கு மாற்றம் ..!! 

 
1

கடந்த 2 ஆம் தேதி தேசிய மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் தேசிய சினிமா தினமான செப்டம்பர் 16-ல் மட்டும் அனைத்து வகையான இருக்கைகளுக்கும் டிக்கெட் விலை ரூ.75 என அறிவித்திருந்ததது.அந்த நாளில் மட்டும் நாடு முழுவதும் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 4000 திரைகளில் டிக்கெட் கட்டணமாக ரூ. 75 மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள் இந்த முன்னெடுப்பில் பங்கேற்கின்றன எனத்  தெரிவித்திருந்தனர்.அவர்களின் இந்த அறிவிப்பை ரசிகர்கள் பலரும் வரவேற்றனர். 

இந்நிலையில் இந்தியா முழுவதும் கடந்த வாரம் வெளியான பிரம்மாஸ்திரம் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாலும்  ’வெந்து தணிந்தது காடு’ வெளியாவதாலும் புதிய படங்களின் வசூலில் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் இந்தத் தேதி மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
இந்த திரைப்படங்களின் வசூல் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக இந்த முடிவை மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா எடுத்து இருக்கலாம் என்வும் தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web