இன்று லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிற்கு  பிறந்தநாள் - நயன்தாரா பற்றிய சில அறிய தகவல்கள்..!!

 
1

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் சொந்த பெயர் டயானா மரியம் குரியன். 2003ம் ஆண்டு மனசின்க்கரே என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்கு நடிக்க வந்த நயன்தாரா, தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். 2005ம் ஆண்டு ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், ரஜினி, விஜய், அஜீத், தனுஷ், சிம்பு, ஆர்யா, ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

1

தமிழ் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார்.இன்று நடிகை நயன்தாரா தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த பிறந்தநாள் அவருக்கு இன்னும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. தனது நீண்டகால காதலரான விக்னேஷ் சிவனை ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட நயன்தாரா, அக்டோபர் 9-ஆம் தேதி வாடகைத் தாய் மூலம் இரட்டை மகன்களைப் பெற்றார்.

1

இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நயன்தாரா மற்றும் அவரது ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்தாக, அவர் நடித்துள்ள 'கனெக்ட்' படத்தின் டீசர், இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை அஸ்வின் சரவண் இயக்கியுள்ளார்.


நயன்தாரா பற்றிய சில அறிய தகவல்கள்

  • தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நயன்தாரா பிறப்பால் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர். அதன் பிறகு கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி சென்னையில் உள்ள ஆர்ய சமாஜ் கோவிலில் வைத்து இந்து மதத்திற்கு மாறியுள்ளார்.
  • இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். மலையாளத்தில் சத்தியம் அந்திக்காடு இயக்கத்தில் வந்த மனசினக்கரே என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 19.
  • மர்தோமா கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்ற இவர் சி.ஏ.பயில வேண்டும் என்று கொள்கையாக கொண்டிருந்தார். ஆனால், அப்போது சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தால் அதனை கைவிட்டுள்ளார்.
  • நயன்தாராவின் உண்மையான பெயர் டயானா மரியம் குரியன். இவருடைய பெற்றோர் குரியன் கொடியட்டு மற்றும் ஓமனா குரியன். இவருடைய அப்பா, இந்திய விமான படை அதிகாரி என்பதால் வெவ்வேறு இடங்களில் படித்துள்ளார்.
  • திரையுலகில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ ஆக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.
     

From Around the web