நடிகை குஷ்பு வீட்டில் நடந்த சோகம்..!! கண்ணீர் விட்டு அழுத நடிகை..!!    

 
1

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் பிறந்த குஷ்பு. தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக நடித்துள்ளார். 80 மற்றும் 90-களின் முக்கிய நடிகையாக வலம் வந்த இவர் ரஜினி, கமல், சரத்குமார் என பல முக்கிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.

Kushboo-brother

சுந்தர்.சி இயக்கிய காஃபி வித் காதல் படத்தைத் தயாரித்த அவர், தற்போது விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மின்சார கண்ணா படத்தில் ஏற்கனவே விஜய்யுடன் இணைந்து நடித்திருந்த குஷ்பு கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

இந்த நிலையில், எனது மூத்த சகோதரர் அபுபக்கர் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகவும், கடந்த 4 நாட்களாக வெண்டிலேட்டரிலிருந்த அவரது உடல்நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்காக எல்லோரும் பிரார்த்தனை செய்துகொள்ளுமாறும் வேண்டிக் கேட்டுக்கொண்டார்.


 

இந்நிலையில் இன்று குஷ்புவின் அண்ணன் அபுபக்கர் காலமானார். இதனை தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ள குஷ்பு, “உங்கள் அன்புக்குரியவர்கள் எப்போதும் உங்களுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் அளவுக்கு, விடைபெறும் நேரமும் வரும். என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது. அவருடைய அன்பும் வழிகாட்டுதலும் எப்போதும் எங்களோடு இருக்கும். அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் சொல்வது போல், வாழ்க்கையின் பயணம் கடவுளால் தீர்மானிக்கப்படுகிறது” என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

From Around the web