பிறந்தநாளில் நிகழ்ந்த சோகம்..!! பிரபல டிக்டாக் பிரபலம் 10ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..!!

 
1

சென்னையில் நூர் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்.   இவர் டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் மிகவும் பிரபலமாக இருந்தார்.   நடன கலைஞரான இவர் 40 வருடங்களாக திரைப்படங்களில் வாய்ப்பு தேடி கிடைக்காததால் விரக்தியில் இருந்தவர் டிவி நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமானார். 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்று பார்வையாளர்களை அதிகம் கவர்ந்தார்.   நடன இயக்குனர்கள் பிரபுதேவா உள்ளிட்ட பலரின் பாராட்டுகளை பெற்றார்.

 அண்மையில் வெளிவந்திருக்கும் அஜித்தின் துணிவு படத்திலும் இவர் சில நிமிடங்கள் நடனம் ஆடி இருக்கிறார்.  அடுத்து ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடனம் ஆடி இருக்கிறார்.

ரமேஷுக்கு நேற்று பிறந்தநாள்.   திடீரென அவர் புளியந்தோப்பில் உள்ள குடியிருப்பின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் .டான்ஸர் ரமேஷின் தற்கொலை அவரது ரசிகர்களை பெரிதும் அதிர்ச்சியால் ஆழ்த்தி இருக்கிறது.

From Around the web